search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதலூரில், விவசாயிகள் சாலை மறியல்
    X

    சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

    பூதலூரில், விவசாயிகள் சாலை மறியல்

    • தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பூதலூர்:

    காவேரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12க்கு பதிலாக மே மாதம் 24 ம் தேதி திறக்கப்பட்டது.

    பருவம் தப்பிய மழையால் நடவு பணிகள் சற்று தாமதம் ஆகியது இதனால் கல்லணையில் தலைப்பு பகுதியான பூதலூர் தாலுகா பகுதிகளில் பல இடங்களில் இன்னும் சில வாரங்களுக்கு வயல்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

    இந்நிலையில் ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது.

    இதனால் தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது

    இதனால் உடனடியாக மேலும் சில வாரங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி இன்று காலை பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் விவசாயிகள் சங்கத்தினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் தஞ்சை மாவட்ட விவசாய சங்க செயலாளர் கண்ணன், தஞ்சை மாவட்ட அனைத்திந்திய மாத சங்க செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முக்கியமான இடத்தில் சாலை மறியல் நடைபெற்றதால் இரண்டு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துநின்றன. பூதலூர் தாசில்தார் பெர்ஷியா திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதை அடுத்து சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

    இதனால் இந்த தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்வள த்துறை அதிகாரி உடன் பேசி நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி கூறியது அடிப்படையில் சாலை மறியல் போரா ட்டம் தற்காலிகமாக கைவி டப்பட்டது.

    Next Story
    ×