பண்ணைக்காடு அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

விவசாயி தனது வீட்டில் துப்பாக்கி வைத் திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.சோதனை நடத்தி துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 5 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரும்பாறை:

பண்ணைக்காடு அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் முத் துமணி (43). விவசாயி. இவர், தனது வீட்டில் துப்பாக்கி வைத் திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பே ரில் போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்த னர். அப்போது வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருந்தது.

ஆனால் துப்பாக்கிக்கான உரிமம் அவரிடம் இல்லை. இது தொடர்பாக முத்து மணியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது தந்தை காலத்தில் இருந்து துப்பாக்கி வைத்திருப்பதாகவும், விளை நிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளை விரட்டுவதற்காக அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 தோட்டாக்கள் கைப்பற்ற ப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com