search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போடி அருகே வீடு, நிலத்தை அபகரித்ததால் விவசாயி தற்கொலை
    X

    கோப்பு படம்

    போடி அருகே வீடு, நிலத்தை அபகரித்ததால் விவசாயி தற்கொலை

    • பணம் கொடுத்த பிறகும் தனது வீடு மற்றும் நிலத்தை அபகரித்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே பசுமை நகரரை சேர்ந்தவர் தவமணி(48). விவசாயி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போடியை சேர்ந்த சிற்றரசன் என்பவருக்கு தனது காலி இடத்தை கிரையம் செய்து கொடுத்து ரூ.3லட்சம் கடன் வாங்கினார். அதன்பின்னர் பணத்தை திருப்பி செலுத்திவிட்ட நிலையில் சிற்றரசன் தவமணிக்கு இடத்ைத எழுதி கொடுக்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை பாண்டி என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துவிட்டார். இதனைதொடர்ந்து பாண்டி, தவமணியிடம் இந்த இடம் தனக்கு சொந்தம் என்றும், வீடு மற்றும் காலியிடத்தை காலி செய்யுமாறும் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் மனஉளைச்ச லில் இருந்த தவமணி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசில் தவமணியின் மனைவி மகாலட்சுமி புகார் அளி த்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×