search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பண்ணை பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு பண்ணை பயிற்சி

    • பயிற்சியில் விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை ஆறு செயல் முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்படும்.
    • முன்னோடி விவசாயி ராமதாஸ் கலந்து கொண்டு ஜீவாமிர்தம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    அரவேணு.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி அரக்கம்பை கிராமத்தில் நடைப்பெற்றது.

    பண்ணைப்பள்ளி பயிற்சியில் விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை ஆறு செயல் முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்படும். இப்பண்ணை பள்ளியில் கோத்தகிரி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் கலந்து கொண்டு தோட்டக்கலை துறை மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சிந்தியா கலந்து கொண்டு காய்கறி சாகுபடி யில் அங்கக இடுபொ ருட்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முன்னோடி விவசாயி ராமதாஸ் கலந்து கொண்டு ஜீவாமிர்தம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    Next Story
    ×