சிவகிரி அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு வசதிகள் செய்துதர வேண்டும் -ஊர் பொதுமக்கள் சார்பாக மனு

பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோவில் செயல் அலுவலரிடம் முறையிட்டனர்.ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் மனுவை செயல் அலுவலர் ஜெகநாதனிடம் அளித்தார்.
சிவகிரி அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு வசதிகள் செய்துதர வேண்டும் -ஊர் பொதுமக்கள் சார்பாக மனு
Published on

சிவகிரி:

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேவிபட்டணம் காளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதனிடம் முறையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து செயல் அலுவலர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவோம் என்று உறுதி அளித்தார்.

எழுத்துப்பூர்வமான கடிதம் கேட்டு ஊர்பொதுமக்களின் சார்பாக தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் மனுவை செயல் அலுவலர் ஜெகநாதனிடம் அளித்தார். இதனையடுத்து மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com