என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தில் கண் பரிசோதனை முகாம்
- டாக்டர் லயனல் ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
- விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.
நெல்லை:
தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தென்மண்டல மருத்துவ இயக்குனர், டாக்டர் லயனல் ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமினை விமான நிலைய இயக்குனர் சிவ பிரசாத் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். டாக்டர் அபிஷியா முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார். மேலாளர்கள் ராபின், பேச்சிமுத்து மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முகாமினை நடத்தினர். இதில் விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story






