search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
    X

    போக்குவரத்து நெரிசலால் மூஞ்சிக்கல் பகுதியில் வாகனங்கள் சிரமத்துடன் பயணிக்கும் காட்சி.

    கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு

    • கொடைக்கானல் நகரின் முக்கிய சந்திப்பு மூஞ்சிக்கல் பகுதியாகும். போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைவது இப்பகுதியாகும்.
    • பிரதான சாலையிலேயே மணல் ஜல்லி,செங்கல் கொட்டி வியாபாரம் செய்து மேலும் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகரின் முக்கிய சந்திப்பு மூஞ்சிக்கல் பகுதியாகும். போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைவது இப்பகுதியாகும்.

    மூஞ்சிக்கல் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் போக்குவரத்து நெரிசல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இப்பகுதியில் மணல் ஜல்லி வியாபாரிகளுக்கும் திடீர் கடைக்காரர்களுக்கும் நெடுஞ்சாலை துறையினர் அனுமதி அளித்தது போல் செயல்பட்டு வருகின்றனர்.

    பிரதான சாலையிலேயே மணல் ஜல்லி,செங்கல் கொட்டி வியாபாரம் செய்து மேலும் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.இதனால் இப்பகுதி பிரதான சாலையிலும் வளைவுச்சலையிலும் முறையாக வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    மாலை நேரங்களில் இப்பகுதியில் இயங்கும் பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகள் இந்த வளைவு சாலையில் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்களால் நடுரோட்டில் நடந்து செல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர்ப்பலி ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    காலை மாலை வேளைகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் கடந்து செல்லும் இப்பகுதி சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் எந்நேரமும் உயிர்ப்பலியோ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து காவல்துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் இதனை கண்டு கொள்வதாக இல்லை.உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் மணல், ஜல்லி வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்தகை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×