பாம்பு கடித்து தொழிலாளி பலி

நாராயணசாமி தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூச்சலிட்டார்.இதனைத்தொடர்ந்து அவரை மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர்.
பாம்பு கடித்து தொழிலாளி பலி
Published on

பவானி:

பவானி அருகில் உள்ள மைலம்பாடி புது காலனி பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று நாராயணசாமி தனது வீட்டின் அருகில் மறைவான இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

உடனே நாராயணசாமி தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூச்சலிட்டார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாராயணசாமி பரிதாபமாக இறந்து விட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மனைவி வளர்மதி பவானி போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com