தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது.வீட்டில் மாரியப்பன் கேபிள் ஓயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தண்ணீர்பந்தல்பாளையம் பூலேரிகாடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (29). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு ராசிகா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மாரியப்பன் குடும்ப செலவுக்காக அவருக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தார்.

இதற்கிடையில் மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன் மாரியப்பன் அவரது குடும்பத்துடன் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் மாரியப்பன் கேபிள் ஓயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அந்தியூர் போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாரியப்பனின் தாய் வீரம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com