என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பிளேடால் அறுத்துக் கொண்டு தொழிலாளி தற்கொலை
  X

  பிளேடால் அறுத்துக் கொண்டு தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலில் புண் ஏற்பட்டதால் கடந்த ஒரு வருட காலமாக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
  • இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியைச் சேர்ந்தவர் பால முரளி கிருஷ்ணன் (49). இவரது அண்ணன் மாரியப்பன் (51).தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.

  மாரியப்பனுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக காலில் புண் ஏற்பட்டதால் கடந்த ஒரு வருட காலமாக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

  இதையடுத்து சம்பவத்தன்று பாலமுரளி கிருஷ்ணன் தனது அண்ணன் மாரியப்பனை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.

  இந்த நிலையில், காலில் ஏற்பட்டிருந்த புண் காரணமாக வலி அதிகமானதால், நேற்று முன் தினம் மாலை மாரியப்பன் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டார்.

  இதையடுத்து, மாரியப்பன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.

  இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×