search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    X

    பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    • ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஆடி பெருக்கு விழாவை யொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கனைள சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காவுக்கு சென்றனர்.

    தொடர்ந்து அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    ஆடி 18 அன்று மட்டும் பவானிசாகர் அணையின் மேல் பகுதியை காண பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்காகவே சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணையை காண வரு வார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை 102 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணை யின் மேல் பகுதிக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணி க்கப் பட்டு வருகிறது.

    இதே போல் ஆடிப்பெ ருக்கு விழாவையொட்டி பண்ணாரியம்மன் கோவி லில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர் களின் கூட்டமாக காண ப்பட்டது.

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று காலை முருகப் பெருமானுக்கு பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டல் முருகன், கோபிசெட்டி பாளையம் சாரதா மாரி யம்மன், பாரியூர் கொண்ட த்து காளியம்மன், பச்சை மலை, பவளமலை முருகன், கொளப்பலூர் அஞ்சநேயர், அளுக்குழி செல்லாண்டி யம்மன், பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர், செல்லா ண்டியம்மன் உள்பட அனைத்து கோவில்களில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×