இரும்பு வியாபாரி விஷம் குடித்து சாவு

வெங்கடேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரும்பு வியாபாரி விஷம் குடித்து சாவு
Published on

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம், தேவகியம்மாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் ( வயது 38 ) இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கு முருகேஸ்வரி (29) என்ற பெண்ணுடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் வெங்கடேசன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது . சண்டையிடும் போதெல்லாம் நான் தூக்கு மாட்டி அல்லது விஷமருந்தி தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று வெங்கடேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார், மனைவி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது வீட்டு வாசலில் வாயில் நுரையுடன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது டாக்டர் பரிசோதித்து பார்த்ததில் வெங்கடேசன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com