கிணற்றுக்குள் விழுந்த நாய்க்குட்டி மீட்பு

அவரது வீட்டில் இருந்த நாய் திடீரென காணாமல் போனது60 அடி ஆழமும் 15 அடி தண்ணீரும் உள்ள அந்த கிணற்றுக்குள் அந்த நாய் தவறி விழுந்து தவித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது
கிணற்றுக்குள் விழுந்த நாய்க்குட்டி மீட்பு
Published on

பெருந்துறை,

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், ஊத்துக்குளி ரோடு, தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் மாயக்கண்ணன். தொழி லாளியான இவர் தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்த நாய் திடீரென காணாமல் போனது. இதையடுத்து அவர் உடனடியாக அந்த பகுதியில் நாயை தேடிப் பார்த்தார். அப்போது வீட்டிற்கு அருகே இருந்த தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் கிணற்று அருகே சென்று பார்த்தார். சுமார் 60 அடி ஆழமும் 15 அடி தண்ணீரும் உள்ள அந்த கிணற்றுக்குள் அந்த நாய் தவறி விழுந்து தவித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து அவர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதை யடுத்து நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு கயிறு கட்டி நாயை பத்தி ரமாக மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com