லாரி மோதி முதியவர் பலி

டாரஸ் லாரி துரைசாமி மீது திடீரென மோதியது. மருத்துவமனையில் டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
லாரி மோதி முதியவர் பலி
Published on

சென்னிமலை:

காங்கேயம் யூனியன் திட்டம்பாளையத்தினை சேர்ந்தவர் துரைசாமி (61). இவர் திட்டம்பாளையத்தில் இருந்து காங்கேயம் - சென்னிமலை ரோட்டில் சென்னிமலை நோக்கி மொபட்டில் வந்தார்.

பசுவபட்டி பிரிவு அருகே ரோட்டை கடந்தபோது அவ்வழியாக வந்த டாரஸ் லாரி இவர் மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து அவரது மகன் நவநீதகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் லாரியை ஓட்டி வந்த பவானி, வரதநல்லூரை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரிடம் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com