தாய்-மகள் விபத்தில் பலி

லாரி எதிர்பாராத விதமாக மொபட்டின் மீது மோதியது.இதில் பலத்த அடிபட்ட 2 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தாய்-மகள் விபத்தில் பலி
Published on

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பூமணி (வயது 45). இவர் தனது தாய் சரஸ்வதியை (வயது 65) அழைத்துக்கொண்டு காஞ்சிக்கோயில் பகுதியில் உள்ள தனது உறவினரின் திருமணத்திற்கு மொபட்டில் வந்தனர்.

பின்னர் திருமணம் முடிந்து மதியம் வீட்டுக்கு செல்வதற்காக காஞ்சிக்கோயில்-திங்களூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை பூமணி ஓட்டி வர அவரது தாய் சரஸ்வதி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

இவர்கள் காஞ்சிக்கோயில் அடுத்துள்ள பூசம்பதி அருகே வரும்போது இவர்களுக்கு எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மொபட்டின் மீது மோதியது.

இதில் பலத்த அடிபட்ட 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக கூறினர். பலத்த அடிபட்ட பூமணி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு உடல்நிலை மோசமாகி விட்டதாக கூறி மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் பூமணியின் உடலை பரிசோதித்து விட்டு அவரும் இறந்து விட்டதாக கூறினர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோயில் போலீசார் லாரியை ஓட்டி வந்த பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com