பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3647 கனஅடியாக அதிகரிப்பு

பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.தண்ணீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 647கனஅடியாக அதிகரித்து உள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3647 கனஅடியாக அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது.

இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர குடிநீர் வசதிக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாகும். மழை காலத்தில் அணை நிரம்பியது. இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது.

அதே நேரம் அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் பவானி சாகர்அணையின் நீர்மட்டம் கிடு கிடு வென குறைந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று பவானி சாகர் அணை பகுதியில் மட்டும் சுமார் 79 மி.மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 647கனஅடியாக அதிகரித்து உள்ளது.

மேலும் அணையின் நீர்மட்டம் 82.29அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com