ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.அணைக்கு வினாடிக்கு 954 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக சூரம்பட்டி வலசு அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக சூரம்பட்டி வலசு அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது.
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதேப்போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.74 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 954 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.87 அடியாக உள்ளது.

30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.31 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 25.49 அடியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com