search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏல விற்பனை
    X

    ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏல விற்பனை

    • அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏல விற்பனை நாளை தொடங்குகிறது
    • ஈரோடு விற்பனை குழுவின் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூட த்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு விற்பனை குழுவின் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூட த்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது. இதை யொட்டி அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாளை (திங்கட் கிழமை) முதல் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை தொடங்குகிறது.

    இந்த மறைமுக ஏல விற்பனையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள், அறவை ஆலை மற்றும் நூற்பு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டு கொள் முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே விவசாயிகள் நன்கு முதிர்ந்த மலர்ந்த வெடித்த பருத்திகளை பறித்து நிழலில் உலர வைத்து தூசி மற்றும் சருகுகளை நீக்கி ரகம் வாரியாக தனித்தனியாக பிரித்து விற்பனை கூடத்தில் நடக்கும் ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும்.

    இதன் மூலம் விவசாயி களின் விளை பொரு ட்களுக்கு சரியான எடை, போட்டி விலை உடனடி பணம் எந்த விதமான பிடித்தம் இன்றி நல்ல விலைக்கு விற்று பயன் பெறலாம் என ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குனர், செயலாளர் மற்றும் அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகி யோர் தெரிவித்தனர்.

    Next Story
    ×