50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணி

தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சி கரட்டுவலசு பகுதியில் கூடுதல் இயக்குநர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னை) சரவணன் மற்றும் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கரட்டுவலசு பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கரட்டுவலசு சாலை வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினையும்,

காந்தி நகர் காலனியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

முன்னதாக கலெக்டர் சாலை அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மைலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சிவானந்தம், பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிமுத்து, சாந்தி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com