ஓட்டல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மனவேதனையில் இருந்து வந்தார். இதனால், நேற்று வீட்டிற்கு அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஓட்டல் தொழிலாளி விஷம்  குடித்து தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(65). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. மதுப்பழக்கத்தை கைவிடக்கோரி அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், கைவிட முடியாத மனவேதனையில் இருந்து வந்தார்.

இதனால், நேற்று வீட்டிற்கு அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ராமச்சந்திரனை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com