சாலையின் நடுவே தடுப்பு சுவரில் மோதிய சொகுசு கார்

சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி நின்றது.காரில் இருந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டது.
சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ள சொகுசு கார் தடுப்பு சுவரில் மோதும் காட்சி.
சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ள சொகுசு கார் தடுப்பு சுவரில் மோதும் காட்சி.
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் இருந்து நேற்று மாலை ஈரோடு நோக்கி வந்த சொகுசு கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சூளை, பாரதி நகர் பகுதியில் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி நின்றது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. காரில் இருந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபர் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொ ண்டனர். விசாரணையில், சொகுசு காரில் வந்தவர் மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஸ்ரீராம் ( 27 ) என்பதும், இவரின் கல்லூரி சான்றிதழ் பெறுவதற்காக தனியார் கல்லூரி சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றதாகவும் தெரிய வந்தது.

விபத்து நடந்த பொழுது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதிகளவில் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் சூளை பகுதியில் தொடர்ந்து இது போன்ற விபத்துகள் ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com