வனத்துறை ஊழியர் மூச்சு திணறி சாவு

திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு ரவிச்சந்திரனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வனத்துறை ஊழியர் மூச்சு திணறி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் ஓசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (35). வனத்துறை ஊழியர். இவரது மனைவி வித்தியா.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் ரவிச்சந்தி ரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் மருந்து மாத்திரை எடுத்து வந்தார். மனைவி தன்னை பிரிந்து சென்று விட்டார் என்ற வேதனையில் ரவிச்சந்திரன் மது குடிக்க தொடங்கினார்.

இதன் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியமங்கலத்தில் உள்ள தங்கை வீட்டிற்கு ரவிச்சந்திரன் சென்று தங்கினார். அப்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு ரவிச்சந்திரனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com