ஊஞ்சலில் விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கி சாவு

ஊஞ்சலில் கழுத்து இறுக்கிய நிலையில் சிறுவன் சாகுல் அமீது தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஊஞ்சலில் விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு சீனியன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அப்பாஸ் (44). இவரது மனைவி சகிலா பானு. இவர்களது மகன் சாகுல் அமீது (12). அமீர் அப்பாஸும், அவரது மனைவி சகிலா பானுவும் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு சென்ற னர்.

பின்னர் அவர்கள் மீண்டும் காலை 9.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாகத் தாழிட ப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகத் தட்டிப் பார்த்தும் கதவு திறக்காததால், தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர்.

அப்போது தான் வழக்கமாக விளையாடும், சேலையால் கட்டப்பட்ட ஊஞ்சலில் கழுத்து இறுக்கிய நிலையில், சிறுவன் சாகுல் அமீது தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவனை மீட்டு, மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாடி த்துடிப்பு குறைந்து வருவ தாக டாக்டர்கள் கூறி யுள்ளனர்.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் சாகுல் அமீதை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே அவன் இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com