என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
By
மாலை மலர்23 Aug 2022 3:23 PM IST

- பெருமாள் மலைப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
- இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1050 பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி:
பவானி அருகே உள்ள பெருமாள் மலைப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பெருமாள் மலை பஸ் நிறுத்தம் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1050 பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர்கள் பெருமாள் மலைப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (29), கிருஷ்ணமூர்த்தி (40), சுதாகர் (28), விக்னேஸ்வரன் (29) என தெரிய வந்தது. அவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
X