பண்ருட்டி அருகே மின் வாரிய அதிகாரி மனைவி தற்கொலை

பெருமாள் மின் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சிகிச்சை பலன் இன்றி பாண்டி பரிதாபமாக இறந்தார்.
பண்ருட்டி அருகே மின் வாரிய அதிகாரி மனைவி தற்கொலை
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே மின் வாரிய அதிகாரி மனைவி தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் பண்ருட்டி மின் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாண்டி (52). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் பாண்டி திடீரென விஷம் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலன் இன்றி பாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து பாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com