search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மாநகராட்சி நடத்தும் நடைபாதை வியாபாரிகள் தேர்தல்- 16 பெண்கள் உள்பட 56 பேர் போட்டி
    X

    சென்னை மாநகராட்சி நடத்தும் நடைபாதை வியாபாரிகள் தேர்தல்- 16 பெண்கள் உள்பட 56 பேர் போட்டி

    • தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • வருகிற 27-ந்தேதி நடைபெறும் தேர்தலில் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    சென்னை:

    நடைபாதை வியாபாரிகளுக்கான நகர விற்பனை குழு தேர்தலை சென்னை மாநகராட்சி நடத்துகிறது. இந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் 16 பெண்கள் உள்பட 56 பேர் போட்டியிடுகிறார்கள்.

    இதில் 3 பெண்கள் உள்பட 11 பேர் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 5 பேர் இதர பிற்பட்ட வகுப்பினர். 11 பேர் சிறுபான்மை இனத்தவர். 6 பேர் மாற்றுத் திறனாளிகள். 12 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள்.

    இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் திருவொற்றியூர் மண்டலத்தை சேர்ந்தவர். மேலும் தண்டையார் பேட்டை மண்டலத்தை சேர்ந்த 2 பேர், ராயபுரத்தை சேர்ந்தவர்கள் 14 பேர், திரு.வி.க.நகரை சேர்ந்தவர்கள் 2 பேர், அம்பத்தூரை சேர்ந்தவர்கள் 15 பேர், அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் 2 பேர், தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் 2 பேர், கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் 12 பேர், அடையாரை சேர்ந்தவர்கள் 4 பேர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என களத்தில் நிற்கிறார்கள்.

    வருகிற 27-ந்தேதி நடைபெறும் இந்த தேர்தலில் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    Next Story
    ×