என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி அருகே  மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
    X

    ஊட்டி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

    • சின்னம்மா வீட்டில் இருந்து புகை வெளியேறியுள்ளது.
    • போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    கோத்தகிரி,

    ஊட்டி அருகே தீட்டுக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னம்மா (70). இவா் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை புகை வெளியேறியுள்ளது.

    இதைத் தொடா்ந்து , அக்கம்பக்கத்தினா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு உடல் கருகிய நிலையில் சின்னம்மா உயிரிழந்து கிடந்துள்ளாா். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

    சம்பவ இடத்துக்கு வந்த உதகை காவல் துறையினா் சின்னம்மாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    விசாரணையில், மின்சாரம் பாய்ந்து சின்னம்மா உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    Next Story
    ×