search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை அணையில் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரில் கழிவுகள் - சுகாதாரம் கேள்விக்குறி
    X

    வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

    வைகை அணையில் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரில் கழிவுகள் - சுகாதாரம் கேள்விக்குறி

    • பிக்கப் அணை தேக்கத்தில் பொதுமக்கள் ஆற்றில் குப்பை மற்றும் கோவில் விழாக்களின் போது ஏற்படும் கழிவுகளை கொட்டுகின்றனர்.
    • ஆற்றில் அதிக அளவு ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்ந்துள்ளது. இவை தண்ணீரை மறைத்து அதன் தன்மையை மாற்று கிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திறக்க ப்படும் தண்ணீர் மதுரை மாவட்ட குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது.

    வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீர் தரைப்பாலம், பெரியபாலம் வழியாக பிக்கப் அணை நீர்தேக்கத்துக்கு வருகிறது. அங்கிருந்து பாசனத்துக்காக கால்வாய், ஆற்றுவழியாக தண்ணீர் திருப்பி விடப்படுகிறது.

    பிக்கப் அணையில் தேங்கும் நீர் பம்பிங் செய்ய ப்பட்டு சுத்திகரிப்புக்குப்பின் மதுரை, தேனி மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்த ப்படுகிறது. கடந்த சில நாட்களாக மழை இல்லாத தால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. முல்லைப்பெ ரியாறு அணையில் 100 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் வெளியேற்றப்படு கிறது. இந்த நீர் பிக்கப் அணை தேக்கத்தில் சேறுகிறது. இங்கு பொது மக்கள் ஆற்றில் குப்பை மற்றும் கோவில் விழாக்க ளின் போது ஏற்படும் கழிவுகளை கொட்டுகின்ற னர். இதனால் குடிநீர் மாசுபட்டு வருகிறது. இதனை குடிக்கும் பொது மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    மேலும் ஆற்றில் அதிக அளவு ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்ந்துள்ளது. இவை தண்ணீரை மறைத்து அதன் தன்மையை மாற்று கிறது. எனவே மதுரை, தேனி மாவட்ட நிர்வாகம் பிக்கப் அணையை முறை யாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×