search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியவர் எடப்பாடி- ஜி.கே.வாசன் பேச்சு
    X

    திருமண வரவேற்பு விழாவில் ஜி.கே.வாசன் பேசினார்.

    டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியவர் எடப்பாடி- ஜி.கே.வாசன் பேச்சு

    • டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
    • பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நடந்த ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. இளைய மகன் திருமண வரவேற்பு விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    பின்னர் அவர் பேசும்போது, மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.

    ஏழை எளிய மக்கள் உயர்தர சிகிச்சை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்பதற்காக தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரை காமராஜ் திறந்து வைத்துள்ளார்.

    காவிரி டெல்டா விவசாயி களின் கோரிக்கைகள் அனைத்தையும் தான் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி.

    அவர் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.

    இது போல் அவர் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.

    காமராஜ் மீது எடப்பாடி பழனிச்சாமி அன்பும் பாசமும் அதிகம் கொண்டவர் என்றார்.

    Next Story
    ×