search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மின் இணைப்பு-ஆதார் எண் இணைப்பு பணி 100 சதவீதத்தை எட்டியது
    X

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மின் இணைப்பு-ஆதார் எண் இணைப்பு பணி 100 சதவீதத்தை எட்டியது

    • நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்தது.
    • 7 கோட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் வாயிலாக ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வந்தது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்தது.

    11 லட்சம் மின் இணைப்பு

    தமிழகத்தில் அதிகமான மின் நுகர்வோர்களை கொண்ட நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மொத்த வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 59 ஆயிரத்து 722 ஆகும்.

    கடந்த நவம்பர் மாதம் முதல் நெல்லை கிராமப்புற கோட்டம், நகர்ப்புற கோட்டம், தென்காசி கோட்டம், சங்கரன்கோவில் கோட்டம், கடையநல்லூர் கோட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், வள்ளியூர் கோட்டம் ஆகிய 7 கோட்டங்களை சேர்ந்த அனைத்து நிலை பணியாளர்கள் வாயிலாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வந்தது.

    புதுப்பிக்கும் பணி

    இந்த பணி தொடங்கிய நாள் முதல் தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு மின்வாரியம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைந்த பிறகு மின் நுகர்வோர் புதிதாக வீடு மாறினாலும், சொந்தமாக வீடு வாங்கினாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை புதுப்பித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×