

தூத்துக்குடி:
தூத்துக்குடி மடத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே 2 வாலிபர்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மடத்தூர் பி அன்ட் டி காலனி பகுதியில் 2 வாலிபர்கள் மது போதையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.
இதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்த செல்லையா என்ற திருமணி சிங் (வயது22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடியவர் பி அன்ட் டி காலனியை சேர்ந்த குட்டி (22) என்பதும் தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.