பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலி

பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலியானார்.டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார்.
பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே காட்டுக்கூடலுார் பழைய காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், (வயது21) . டிரைவர். இவர், காட்டுக்கூடலுாரில் கார்த்திக் என்பவரது டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார். பின்னர் ஏரியில் கிருஷ்ண குமார் குளித்தபோது ஆழமான பகுதியில் சென்று சிக்கிய கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் கிருஷ்ணகுமார்உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com