search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, வள்ளியூரில் நாளை இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞர் -மாணவர் அணி ஆர்ப்பாட்டம் - மாவட்ட செயலாளர்கள் அறிக்கை
    X

    நெல்லை, வள்ளியூரில் நாளை இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞர் -மாணவர் அணி ஆர்ப்பாட்டம் - மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

    • இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    • ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர்-மாணவரணி சார்பில் நாளை (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    நெல்லை-வள்ளியூர்

    நெல்லையில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர் ஆவுடை யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர்-மாணவரணி சார்பில் வள்ளியூா் பழைய பஸ் நிலையம் அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இக்கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா்கள் முன்னிலை வகிக்கிறாா்கள். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை, வாா்டு செயலாளா்கள், மாவட்ட பிரதிநிதிகள், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் இளைஞரணி, மாணரவணி நிா்வாகிகள், தோழா்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    இந்தி திணிப்பை கண்டித்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இதில் இளைஞரணி, மாணவரணி, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை, வாா்டு செயலாளா்கள், மாவட்ட பிரதிநிதிகள், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×