வாழப்பாடி அருகே கொலை வழக்கில் சாட்சியை மிரட்டிய தி.மு.க. நிர்வாகி கைது

கடந்த 2010-ம் ஆண்டு அத்தனூர்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை, காரிப்பட்டி அருகே வைத்து கொலை செய்ததாக காரிப்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். போலீசார், பாண்டியன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற பாண்டியன், வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்தார்.
வாழப்பாடி அருகே கொலை வழக்கில் சாட்சியை மிரட்டிய தி.மு.க. நிர்வாகி கைது
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் என்கிற திருமுருக வீரபாண்டியன் (வயது 50). தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், கடந்த 2010-ம் ஆண்டு அத்தனூர்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை, காரிப்பட்டி அருகே வைத்து கொலை செய்ததாக காரிப்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

சாட்சியை மிரட்டினார்

இந்த வழக்கில் செந்தில்குமாரின் சகோதரரான சேட்டு என்கிற செல்வராஜ், பாண்டியனுக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் சாட்சி அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் வாழப்பாடி போலீசார், பாண்டியன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற பாண்டியன், வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, பனங்காடு அருகே சென்று கொண்டிருந்த செல்வராஜ் மகன் கர்ணா (25) என்பவரை வழிமறித்த பாண்டியன், எனக்கு எதிராக சாட்சி சொன்ன உனது தந்தையை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கர்ணா, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

கைது

இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாண்டியனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com