குருவிகுளத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டத்திற்கு கடற்கரை தலைமை தாங்கினார். நாஞ்சில் சம்பத்,ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ., பேசியபோது எடுத்த படம்.
கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ., பேசியபோது எடுத்த படம்.
Published on

சங்கரன்கோவில்:

குருவிகுளம் அண்ணா திடலில் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா, பொதுக் கூட்டம் நடைபெற்றது. குருவிகுளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கடற்கரை தலைமை தாங்கினார்.

தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்தராஜ், ராஜ குலராமர்பாண்டியன், ராமகிருஷ்ணசாமி, ராஜா, சுப்பிரமணியன், வேலுச்சாமி, கிருஷ்ண சாமி, மாடசாமி, பார்வதி, கணேசன், சுந்தர பாண்டியன், முத்துலட்சுமி, கண்ணன், கணேசன், செல்வி பாலசுப்ரமணியன், ஜெய்சங்கர், கேவி கணேசன், மாரிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் சுதா பிரபாகரன் வரவேற்றார். கலைச்செல்வன், செந்தில்நாதன் ஆகியோர் தொகுப்புரை வழங்கினர்.

தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் முத்துச்செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட நிர்வாகிகள் பத்மநாதன், ராஜதுரை, செயற்குழு உறுப்பினர்கள் பராசக்தி, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி சரவணன், பேரூர் செயலாளர் மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியப்பன், ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துச்சாமி, மனோகரன், சண்முக பாண்டி, செந்தூரப்பாண்டி, வக்கீல் அணி பிரபாகரன், ஜெயக்குமார் மற்றும் மூத்த முன்னோடிகள், கிளை செய லாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com