வேடசந்தூரில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பாராளுமன்ற வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

வேடசந்தூர்:

தி.மு.க தலைமை மாநிலம் முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தர விட்டது. இதனையடுத்து வேடசந்தூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 16 ஆயிரம் உறுப்பினர் சேர்க்கும் பணி நேற்று காலை முதல் தொடங்கியது. பாரதிநகரில் தொடங்கிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பாராளுமன்ற வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார்.

வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மோகன், தெற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் வெங்கடசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், வேடசந்தூர் பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர் மற்றும் ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய அவைத் தலைவர் ஆரோன், பேரூராட்சி தலைவர் மேகலாகார்த்தி கேயன் உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com