search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் வாழைப்பழம், மாம்பழங்களை பழுக்க வைக்க  புது ரசாயனம் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
    X

    தருமபுரியில் உள்ள ஒரு பழக்கடையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பழங்களை ஆய்வு செய்த காட்சி.

    தருமபுரியில் வாழைப்பழம், மாம்பழங்களை பழுக்க வைக்க புது ரசாயனம் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

    • மாங்காயை உடனடியாக பழுக்க வைக்க, 'கால்சியம் கார்பைடு' என்ற ரசாயன கல்லை பயன்படுத்துகின்றனர்.
    • ஆய்வில் 3 கடைகளுக்கு உடனடியாக தலா ரூ.2000 அபராதமாக விதிக்கப்பட்டது

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் தருமபுரி நகரப் பகுதியில் உள்ள வாழைத்தார் மண்டி, மாம்பழ மண்டிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    தருமபுரி பழ மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, சாத்துக்குடி, பப்பாளி உள்ளிட்ட பல வகை பழங்களும் விற்பனைக்கு வருகின்றன.

    இயற்கையாக கனியும் பழங்கள், நம்மை கவர்ந்து இழுக்கும் வாசனையுடன் மிகவும் ருசியாகவும், உடல் நலத்துக்கு பாதிப்பு இல்லாததாக இருக்கும்.ஆனால், வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், மாங்காயை உடனடியாக பழுக்க வைக்க, 'கால்சியம் கார்பைடு' என்ற ரசாயன கல்லை பயன்படுத்துகின்றனர். ரசாயன பொருளில் இருந்து வெளியாகும்,

    வெப்பத்தை தாங்க முடியாமல், 2நாட்களுக்குள், மாங்காய் முழுமையாக பழுத்துவிடும். இந்த பழங்களை உண்பவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

    சிறு பாக்கெட்டில் வரும் எத்திலின் ரசாயன பொடியை, தண்ணீரில் கரைத்து, பழங்கள் மீது தெளிக்கின்றனர். இவ்வாறு எத்திலின் ரசாயனம் தெளித்த பழங்கள் இயற்கையாக வரும் வாசனை இன்றி காணப்படும். அதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள வாழைத்தார் மண்டிக்கு வரும் வாழைத்தார்களை இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கும் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வாழைப் பழங்கள் இயற்கையாக பழுப்பதற்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் ஆகும் நிலையில் வியாபாரிகள் ரசாயன பொடியை நீரில் கலந்து வாழைத்தார் மீது ஊற்றி விட்டால் ஒரே நாளில் பழம் பழுத்து பளபளவென்று எலுமிச்சை கலரில் கண்ணை பறிக்கும் இதை பொதுமக்கள் வாங்கி உண்ணும் பொழுது வயிற்றுப்போக்கு உடல் உபாதைகள் என பல நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகுகின்றனர். இதுகுறித்து நேற்று முன்தினம் மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து நேற்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பானு சுஜாதா தலைமையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால் கந்தசாமி குமணன் உள்ளிட்டோர் தருமபுரி நகரப் பகுதியில் உள்ள 15 க்கும் மேற்பட்ட வாழைத்தார் மண்டி, மாம்பழம் மண்டிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் இருந்த எத்திலின் பொடி பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது சந்தேகத்திற்குரிய கடைகளில் வாழைத்தார்களை ஆய்வு செய்ததில் 50 கிலோவுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கருத்து அழுகிய நிலையில் காணப்பட்டது அவைகளை ஆய்வுக்கு மேலும் 3 கடைகளுக்கு உடனடியாக தலா ரூ.2000 அபராதமாக விதிக்கப்பட்டது.

    Next Story
    ×