search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் ஆய்வு.

    வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

    • தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கழிவறையினை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.
    • மேலும் பல்வேறு பணிகளை குறித்து ஆய்வு செய்து நடடிக்கை மேற்கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்ஆய்வில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உடனிருந்தார்.

    திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட, பாமணி ஊராட்சியில் ரூ.21.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும், பாமணி ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுவரும் கழிவறையினையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    திருத்துறைப்பூண்டி ஒன்றியம், பாமணி ஊராட்சி, அம்பேத்கர் காலணியில் 150 மீட்டர் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவருவதையும் ஆய்வு செய்து பணிகள் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாமணி ஊராட்சியில், ரூ.7.16 லட்சம் மதிப்பீட்டில் நெல் உலர்த்தும் கலம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பாமணி ஊராட்சியில் அங்கான்வாடி மையத்திலுள்ள குழந்தைகளுடைய எடை, உயரம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.

    பாமணி ஊராட்சிக்குட்பட்ட செங்குந்தார் தெருவில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவது குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.

    அதனை தொடர்ந்து எடையூர் ஊராட்சிக்குட்பட்ட அரசினர் உயர்நிலைப்பள்ளியின் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவியர்களிடம் உணவு நல்ல முறையில் வழங்கப்படுகின்றனவா என்பதையும், அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கின்றனவா என்பதையும் கேட்டறிந்தார்.

    எடையூர் ஊராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நோயாளிகள் குறித்த பதிவேடுகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்.

    திருவாரூர் வட்டம், கூடூர் ஊராட்சி, மொசக்குளம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளை சந்தித்து திட்டம் குறித்து ஆய்வு செய்தார். நன்னிலம் ஒன்றியம், முடிகொண்டான் சமத்துவபுரம் பகுதியில் பழுதடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இவ்ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் கீர்த்தனா மணி, சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவல ர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×