களக்காடு அருகே கோவில் விழா தகராறில் கோஷ்டி மோதல்; 5 பேர் காயம்-7 பேர் மீது வழக்குப்பதிவு

களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனைதொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பாட்டில்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர்.
களக்காடு அருகே கோவில் விழா தகராறில் கோஷ்டி மோதல்; 5 பேர் காயம்-7 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவர் மேல தேவநல்லூரில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் விழாவில் வெடி வைக்க சென்றார். அப்போது மணிகண்டன் தரப்பினருக்கும், அதே ஊரை சேர்ந்த பெருமாள் மகன் அய்யப்பன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன், அவரது உறவினர் வெங்கடேஷ் என்பவரும் பொத்தை சுத்தி கோவிலுக்கு சென்று விட்டு, மேலதேவநல்லூர் பாலம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அய்யப்பன் தரப்பினருக்கும், மணிகண்டன் தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பாட்டில்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் மணிகண்டன், வெங்கடேஷ், வேல்முருகன், இசக்கிமுத்து, அய்யப்பன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இரு தரப்பை சேர்ந்த அய்யப்பன், இசக்கிமுத்து, நாராயணன் மகன் வெங்கடேஷ், மணிகண்டன், ராமசாமி, ராமசுப்பு மகன் வெங்கடேஷ், ராஜா ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com