நீலகிரியில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்

ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நீலகிரியில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியில் சட்டமன்ற தொகுதி, நகர, ஒன்றிய, பேரூர் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுடான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியினர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து நிர்வாக தொண்டர்களுக்கு ஆலோசனை களை மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ெஜகநாத் ராவ், செந்தில் , பிருந்தா, ஜெய்விக்னேஷ் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com