நல்லம்பள்ளி அருகே எலி மருந்து சாப்பிட்ட பிளஸ்-2 மாணவி சாவு

நல்லம்பள்ளி அருகே எலி மருந்து சாப்பிட்ட பிளஸ்-2 மாணவி உயிரிழந்தார்.
.
.
Published on

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நல்லசேனஹள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் லட்சுமி பிரியா (வயது17). இவர் லலிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 22-ந்தேதி அன்று எலி மருந்து சாப்பிட்டார்.

இதனால் அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக லட்சுமி பிரியா உயிரிழந்தார்.

 இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com