

தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பங்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி ஷாலினி (வயது 19). இவர்களுக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 24ந் தேதி ஷாலினி, தனது உறவுக்கார பெண்ணுடன் தருமபுரியில் உள்ள ஒரு பல் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஷாலினி மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்று தெரிய வில்லை. இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாலினி காதல் பிரச்சினையில் எங்காவது சென்றாரா? அல்லது வேறெதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.