

தருமபுரி,
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் ஏசுராஜன், (வயது 51). ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இதை கொளத்தூரை சேர்ந்த சதீஷ் என்ற புரோக்கர் மூலம் தருமபுரி நெல்லி நகரை சேர்ந்த குமார் (51), என்பவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி கொடுத்துள்ளார்.
அப்போது ஏசுராஜனுக்கு ரூ.10 ஆயிரம் முன்பணமாக குமார் வழங்கினார். அதன்பின்னர் புரோக்கர் சதீஷ் மற்றும் குமார் ஆகியோர் எந்திரத்தை ஒப்படைக்காமலும், வாடகை தராமலும் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏசுராஜன், தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் குமாரை கைது செய்தனர். தலைமறைவான சதீசை போலீசார் தேடி வருகின்றனர்.