மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த வியாபாரி சாவு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பறிதாபமாக உயிரிழந்தார்.
.
.
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள காளி கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் (வயது36). இவர் பெங்களூருவில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராம் பிரகாஷ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டிற்கு மளிகை பொருட்களை வாங்குவதற்கு அவர் தருமபுரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். 

பின்னர் வீடு திரும்பிய அவர் தின்னூர் பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் ராம்பிரகாஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனால் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை பரிதாபமாக ராம்பிரகாஷ் உயிரிழந்தார்.

இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com