தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் தக்காளி விலை திடீர் உயர்வு

ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.தக்காளி செடிகள் வயலிலேயே அழுகி வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் தக்காளி விலை திடீர் உயர்வு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, பெல்ராம்பட்டி, கரகூர், பென்னாகரம், காரிமங்கலம், அத்திமுட்லு, திருமல்வாடி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரது அதிகரிப்பால் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் தக்காளி விலை 5 ரூபாய் முதல் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்பொழுது தொடர்ந்து தமிழக முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பத்து நாட்களாக மழை பெய்து வருவதால் தக்காளி செடிகள் வயலிலேயே அழுகி வருகிறது.

இதனால் தக்காளி வரத்து தினசரி மார்க்கத்திற்கு வெகுவாக குறைந்துள்ளது. மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் திடீரென தக்காளி விலை உயர்ந்துள்ளது உழவர் சந்தையில் கிலோ 6 ரூபாயில் இருந்த தக்காளி தொடர்ந்து கிலோ 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெளிமார்க்கெட்டில் கிலோ தக்காளி 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com