நிலக்கோட்டை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடைபெற பக்தர்கள் நூதன வழிபாடு

நிலக்கோட்டை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடைபெற பக்தர்கள் நூதன வழிபாடு நடத்தினர்
நிலக்கோட்டையில் திருமுறை விண்ணப்பம் பாடி பக்தர்கள் கோரிக்கை வைத்த காட்சி
நிலக்கோட்டையில் திருமுறை விண்ணப்பம் பாடி பக்தர்கள் கோரிக்கை வைத்த காட்சி
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிவகாமி அம்மன் உடனுறை நடராஜர் கோவில் ஆலயப்பணி முடித்து கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளது.

இருந்தும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் தாமதமாகி வந்ததால் உடனடியாக நடத்திட இறைவனை வேண்டி அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திருமுறை பாடி வேண்டுதல்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கோவிலில் கயிலாய வாத்தியங்கள் முழங்க திருமுறை பாடல்கள் பாடப்பட்டது. பாண்டிய மண்டலத்தில் நடராஜர் சிலைகள் திருமேனியாகத்தான் காணப்படுகிறது.

ஆகவே நிலக்கோட்யில் சிறப்பு ஆகமவிதிப்படி நடராஜர் கல் திருமேனி சிலைகள் வைக்கவும், பஞ்சலோக திருமேனி வைப்பது உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி திருமுறை பாட்டும், சிவ வாத்தியங்களும் வாசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் கோபி, செல்வம், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com