search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள்  - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
    X

    பிரையன்ட் நகர் 12-வது தெருவில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

    • பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து புதிதாக போடப்பட்டுள்ள வழித்தடத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மாநகராட்சி அலுவலகத்தில் மாநகரின் பிரதான சாலைகளை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை மேயர் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதி வளர்ச்சி பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கருப்பட்டி சொசைட்டி அருகில் உள்ள தெருக்களில் குடிநீர் சரியாக வரவில்லை என்று பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து புதிதாக போடப்பட்டுள்ள வழித்தடத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் 3-வது மைல் மேம்பாலத்தில் இருந்து பக்கிள் ஓடையை நோக்கி செல்லும் பாதையை அகலப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அதன் அருகே உள்ள காவல் சோதனை சாவடியை எதிர்புறம் அமைக்க அதிகாரிகளிடம் பேசினார். வரும் நாட்களில் பணிகள் ஆரம்பமாகும் என்று அப்போது மேயர் தெரிவித்தார்.

    மாநகராட்சி அலுவ லகத்தில் மாநகரின் பிரதான சாலைகளை கண்கா ணிக்கும் ஒருங்கி ணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடு களை பார்வை யிட்டார்.தொடர்ந்து மேட்டுபட்டி யில் இருந்த மின் மயானத்தின் தகன மேடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பழுதடைந்து காணப்படு வதாக ஏற்கனவே ஆய்வு செய்த பொழுது பொதுமக்கள் கூறினர்.தற்போது அந்த பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவுற்று ள்ளதை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பெரியசாமி அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    மேலும் பிரையன்ட் நகர் 12-வது தெருவில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளையும், மில்லர்புரம் மற்றும் ராஜீவ் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்

    ஆய்வுகளின் போது மேயரு டன் முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மாநகர துணை செயலாளரும், கவுன்சிலருமான கீதாமுரு கேசன், கவுன்சிலர்கள் ஜான் சீனிவாசன், பொன்னப்பன் கண்ணன், முத்துவேல் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளராக ரமேஷ் பிரபாகரன், ஜாஸ்பர், மாநகராட்சி அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×