search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓட்டப்பிடாரம் அருகே ரூ.13.83 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
    X

    பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    ஓட்டப்பிடாரம் அருகே ரூ.13.83 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்

    • பொதுப்பணித்துறை மூலமாக 6 பாலங்கள் அமைத்தல், புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் பணிகள் தொடங்கியது.
    • அதனை தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் பொது மக்களின் பிரதான அடிப்படை தேவைகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மலைப்பட்டி, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர், மலர்க்குளம், பெரியகுளம் மற்றும் ஒட்டப்பிடாரம் சுற்றியுள்ள 50 கிராம குளங்கள் பயன்பெறும் வகையில் வரத்து கால்வாய் நீரோடையில் 6 பாலங்கள் அமைத்தல், 15 கிலோமீட்டர் தூரம் வரை தூர்வாரும் பணி, மேலும் புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் போன்ற கோரிக்கைகளை ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா அளித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நடவடிக்கையின் மூலம் பொதுப்பணித்துறை மூலமாக ரூ. 13.83 கோடி மதிப்பீட்டில் 6 பாலங்கள் அமைத்தல்,15 கிலோமீட்டர் தூரம் வரை தூர்வாரும் பணி மேலும் புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் பணிகள் தொடங்கியது. அதனை தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட உதவி செயற்பொறி யாளர் சங்கர்ராஜ், உதவி பொறியாளர் ஆறுமுகராஜ், கள உதவியாளர் பிரபாகர், தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், சித்ராதேவி சண்முகராஜ், மொட்டையசாமி, மாவட்ட பிரதிநிதி தங்ககுமார், நகரச் செயலாளர் லிங்கராஜ், வர்த்தகர் அணி முத்துக்குமார், சிறுபான்மை அணி ஞானதுரை, ஆரைக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் சங்கரி, ஊராட்சி செயலர் செல்வம், ஒட்டப்பிடாரம் ஊராட்சிமன்ற தலைவர் இளையராஜா, அவைத் தலைவர் சுப்பிரமணியன், ஆரைக்குளம் கிளைச் செயலாளர்கள் பால முருகன், நிறைய பூபதி, கிளை பிரதிநிதி சமுத்திரவேல், முருகன், ஓசநூத்து கிளை செயலாளர் சண்முகம், புதியம்புத்தூர் கிளைச் செயலாளர்கள் சற்குணபாண்டி, பாலகுருசாமி, கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×