என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரணியை மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
நெல்லை டவுனில் டெங்கு விழிப்புணர்வு பேரணி- மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்
- நெல்லை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு பரவலை தடுக்க கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவில் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு பரவலை தடுக்க கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவில் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதுதவிர வாறுகால்கள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை விரைவுபடுத்தி அதனை அவ்வப்போது மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டெங்கு உள்ளிட்ட எந்த காய்ச்சல்களும் பொதுமக்களுக்கு ஏற்படாமல் இருக்க அனைத்துவித முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைளும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.
விழிப்புணர்வு பேரணி
இந்நிலையில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனை மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
பேரணி 4 ரதவீதிகள் வழியாக சென்றது. இதில் கலந்த கொண்டவர்கள் டெங்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
உறுதிமொழி
முன்னதாக மேயர் சரவணன் தலைமையில் டெங்கு ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மாமன்ற உறுப்பினர் உலகநாதன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் டெங்கு களப்பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.