கோத்தகிரியில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்

மின் கட்டணம் உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
கோத்தகிரியில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
Published on

அரவேணு:

தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின் கட்டணம் உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் மற்றும் மின்சார திருத்த மசோதாவினை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதனை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் பகுதியாக கோத்தகிரி நெடுகுளா உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இடை கமிட்டி செயலாளர் மணிகண்டன் தலைமையில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், கட்சியின் இடைக் குழு உறுப்பினர் சுந்தர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இடை குழு செயலாளர் பகத்சிங், இந்திய மாணவர் சங்க செயலாளர் சச்சின் மற்றும் பல தோழர்கள் பங்கேற்று உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com